டெல்லி : டெல்லியில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேகவெடிப்பினால் இந்த திடீர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கனமழை காரணமாக ராஜிந்தர் நகர், நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதே போல புதிய நாடாளுமன்ற வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பகுதியில் மழைநீர் கட்டிடத்திற்கு உள்ளே ஒழுகியது. ஒழுகிய மழைநீரை வாளி வைத்து ஊழியர்கள் பிடித்துள்ளனர் […]
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தியாகிகள் பேரணி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய மம்தா பேனர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிகளில் 38 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால், அதனை யாராலும் […]
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது மன்னர் ஆட்சி காலத்தில் அந்த அவையில் ஆட்சியின் அடையாளமாக நிறுவப்பட்டு இருக்கும் செங்கோல் ஆனது , புதிய நாடாளுமன்ற கட்டத்திலும் நிறுவப்பட்டது. இதனை பிரதமர் மோடி நிறுவினார். இந்த செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி எம்பி கடிதம் எழுதி உள்ளார். சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், மக்களவை சபாநாயகர் இருக்கையின் வலதுபுறம் செங்கோல் இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இது ஜனநாயக […]
அகிலேஷ் யாதவ்: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளில் பாஜகவின் கோட்டையான யூ.பியில் அதிக இடங்களில் தோல்வியுற்று அதிரிச்சியளித்திருந்தது. இதனை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பாஜகவின் தோல்வியை குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், “பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம் ஆனால் வெல்ல முடியாமல் போனது அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், யூபியில் பல இடங்களில் மக்கள் பாஜக மீது நம்பிக்கை இல்லாமல் தோற்கடித்து […]
டெல்லி: இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் என பல்வேறு கட்சி தலைவர்கள்/பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், பக்வந்த் மன், சரத் பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் , […]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு வரவேற்பு தெரிவித்து I.N.D.I.A கூட்டணி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜூன் 1 வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இடைக்கால ஜாமீன் […]
Akhilesh Yadav: சட்டவிரோத சுரங்க வழக்கில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று (புதன்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2019 ஜனவரி 2-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! […]
உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். […]
உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை அகிலேஷுடன் தொலைபேசியில் தொடர்புக்கொடு பேசியதை தொடர்ந்து, இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியதாக கூறப்படுகிறது. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையேயான கூட்டணி, தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்ததாக […]
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும், சமாஜ்வாதியும் இணைந்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வந்தது. 7 இடங்களைப் ராஷ்டிரிய லோக் தளத்திற்கு (ஆர்எல்டி) சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே இறுதி செய்துள்ளது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடனான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 […]
ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு எதிராகவும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியினை முதலில் ஒன்றிணைத்து முதல் ஆலோசனை கூட்டமே பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதே போல அடுத்தடுத்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திலும் […]
மெயின்பூரி மக்களவை தொகுதி மற்றும் ராம்பூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாடி முன்னிலை பெற்று வருகிறது. உத்திர பிரதச மாநிலத்தில் ராஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பின்னர் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெயின்பூரி மக்களவை தொகுதிக்கும், ராம்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கானின் தகுதி நீக்கம் ஆகிய காரணங்களுக்காக ராம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடை தேர்தல் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. […]
உதைத்தார் பிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சில பகுதிகளிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் உத்தர பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் ஏ.கே.சர்மா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும், பருவகால புயலால் ஹர்துவாகஞ்ச்-605 மெகாவாட் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்து போர்க்கால அடிப்படையில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். சர்மாவின் கருத்துக்கு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, அரசாங்கத்தின் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் தொடர்ந்து ஆளும் கட்சியான பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்கள் அனைத்தும் ஊழலின் கூடாரமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜக அரசின் சகிப்புத்தன்மை இல்லாத இந்தக் கொள்கைகள் […]
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரின் மருமகளும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபர்ணா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் மருமகள் அபர்ணா யாதவ் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மற்றும் பாஜக மாநில தலைவர் சுதந்திர தேவ் சிங் ஆகியோரின் முன்னிலையில் அபர்ணா பாஜகவில் இணைந்துள்ளார். பின் […]
முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் என உத்தர பிரதேச மந்திரி ஆனந்த் கூறியுள்ளார். அண்மையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே சிந்தனை உடைய தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காக மூவரும் போராடினார்கள் என தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். […]
தர்ணா போராட்டம் நடத்திய அகிலேஷ் யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தை உத்திரபிரதேசம் லக்கிம்பூரை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். நேற்று லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்க அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக கூறப்பட்டது. இதனால், துணை முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற பாஜகவினரின் வாகன அணிவகுப்பு […]
பாஜக இராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமாகிய அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் பயிற்சி பெற்ற இராமணர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பாஜக மக்களிடம் பல பொய்யான தகவல்களையும், குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கின் பொழுது […]
அகிலேஷ் யாதவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த கொரோனா வைரசால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கடந்த பல நாட்களாக […]
உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்த பின், மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் வருகிற ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது தற்போது எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவரிடம் நிருபர்கள், மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், […]