“குழந்தைகளின் இறைச்சியை உணவாக வழங்கிய ISIS”.. திகிலை விவரித்த யாசிதி பெண்.!

ஃபவ்சியா அமின் சிடோ, ISIS காவலில் இருந்தபோது தான் சித்திரவதை செய்யப்பட்ட திகில் சம்பவத்தை விவரித்துள்ளார்.

Fawzia Amin Saydo

காசா : வடக்கு ஈராக்கைச் சேர்ந்த யாசிதி இனத்தைச் சேர்ந்த ஃபாவ்சியா அமின் சிடோ, 2014 பயங்கரவாத ஆட்சியின் போது ISIS ஆல் அடிமைப்படுத்தப்பட்ட பல யாசிதி பெண்களில் ஒருவர். அப்போது, ஃபௌசியாவுக்கு 11 வயது என்று கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அவர் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 21 வயதுடைய அந்த (யாசிதி பெண்) ஃபவ்சியா அமின் சிடோ, ISIS காவலில் இருந்தபோது தான் சித்திரவதை செய்யப்பட்ட திகில் சம்பவத்தை விவரித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ஃபௌசியா அமின் சிடோ, தனது சகோதரர்களுடன் பிடிபட்டதையும், அவர்கள் அனைவரும் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தது பற்றியும் பேசினார். பின்னர், அவர்கள் அரிசியை சமைத்து, அதனுடன் இறைச்சியைக் கொடுத்தார்கள்.

இறைச்சியின் சுவை மிகவும் மோசமாக இருந்தது. எங்களில் சிலருக்கு வயிற்று வலி கூட ஏற்பட்டதாக கூறினார். நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், இது யாசிதி குழந்தைகளின் இறைச்சி என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.

அதுமட்டுமின்றி, தலை வெட்டப்பட்ட சில குழந்தைகளின் புகைப்படங்களைக் காட்டி, நீங்கள் சாப்பிடும் இறைச்சி இந்தக் குழந்தைகளின் இறைச்சி” என்று சொன்னார்கள். இதனை கேட்ட அருகில் இருந்த ஒரு பெண் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்