தங்கம் வாங்க காத்திருந்தீங்களா? ஷாக் கொடுத்த இன்றைய விலை!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, வாரத்தின் தொடக்கத்திலேய மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், கிராமுக்குக் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனை செய்யப்பட்டு பொதுமக்களுக்குச் சிறிய நிம்மதியை அளித்திருந்தது.

ஆனால், அந்தச் சரிவு நீடிக்காமல் தற்போது மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250 என்ற விலையிலும், சவரன் ரூ.1,06,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதுமட்டுமின்றி, 22 காரட் தங்கத்துடன் சேர்த்து 18 காரட் தங்கம் விலையிலும் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,065-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை மீண்டும் சவரன் 1 லட்சத்து 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதால், நகை வாங்குவோரிடையே மீண்டும் கவலை அதிகரித்துள்ளது.

தங்கம் வாங்க காத்திருந்தீங்களா? ஷாக் கொடுத்த இன்றைய விலை!