கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரையில் காசாவில் குறிப்பிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி தான் வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் ஹமாஸ் மீதான தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தாக்குதலை தொடர்ந்து வருகிறார். ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் […]
காசா : கடந்த வருடம் அக்-7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே சுமார் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் காசாவின் பீட்லாஹியா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் […]
தெஹ்ரான் : ஈரானின் தலைநகரான தெஹ்ரான் பகுதியில், கோஜிர் இராணுவ தளத்தில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் ஏவுகணை தயாரிக்கும் தளங்களை என ஈரான் ரகசியமாக செயல்படுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கும் இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த காசா-இஸ்ரேல் போரில், ஆதரவாக ஹிஸ்புல்லாக்களும், ஹமாஸ் அமைப்பும் களமிறங்கியது. இந்த விளைவாக இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய […]
காசா : வடக்கு ஈராக்கைச் சேர்ந்த யாசிதி இனத்தைச் சேர்ந்த ஃபாவ்சியா அமின் சிடோ, 2014 பயங்கரவாத ஆட்சியின் போது ISIS ஆல் அடிமைப்படுத்தப்பட்ட பல யாசிதி பெண்களில் ஒருவர். அப்போது, ஃபௌசியாவுக்கு 11 வயது என்று கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அவர் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 21 வயதுடைய அந்த (யாசிதி பெண்) ஃபவ்சியா அமின் சிடோ, ISIS காவலில் […]
டெல் அவீவ் : கடந்த வியாழன் அன்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றதை அடுத்து , லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிரான போரை அதிகரிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தது இருந்தது. இதனையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். Read More- யாஹியா சின்வர் உயிரிழப்பு : கடைசி நிமிட வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்! குறிப்பாக, லெபனானில் இருந்து இன்று காலை இஸ்ரேலின் டெல் அவிவ் […]
காசா : கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மக்கள் மீது காசா நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தான் யாஹியா சின்வர். அவரை பிடிக்க இஸ்ரேல் ராணுவம் முயற்சித்த போது, சின்வர் தப்பித்து விட்டார். இதனால், அவரை உயிரோடு அல்லது பிணமாக மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் அப்போது தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில், நேற்று முன்தினம் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது […]
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் சுமார் 42,000-திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த போர் முற்றிய நிலையில் ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் நேற்று காசாவில் […]
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர் நடைபெற்று வருகிறது. அதிலும், சமீப நாட்களில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை அங்கு மேற்கொண்டு வந்தது. இதில், இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாங்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் ஹமாஸ் தலைவரான ‘யாஹ்யா சின்வர்’. இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்து […]
காசா : கடந்த ஆண்டில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்ட்டனர், பல இடங்கள் இஸ்ரேலில் நாசமானது. மேலும், ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு சிலர் போர் நிறுத்த அடிப்படையில் மீட்கப்பட்டாலும், மீதம் இருக்கும் மக்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஒரு ஆண்டை கடந்து நடந்து வரும் இந்த போரில் மட்டும் சுமார் 42,000 […]
டெல் அவிவ் : கடந்த ஒருவருடமாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து ஒரு புறம் காசா மறுபுறம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் ஹிஸ்புல்லா என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதில், நாளுக்கு நாள் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகிறது. இப்படி போர் நடைபெற்று வரும் வேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்தது. அதன் விளைவாக, ஹிஸ்புல்லா […]
அமெரிக்கா : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனவே, நேற்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவைக் குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றது. அதைப்போல, இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் அமெரிக்காவிலும் இரங்கல் கூட்டம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரத்தை ஒதிக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அதில் அவர் பேசியதாவது, “கடந்த […]
இஸ்ரேல் : ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் ஹமாஸ், இஸ்ரேலின் மக்கள் சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். அதன்பின், போர் நிறுத்த அடிப்படையில் சிலரை ஹமாஸ் விடுவித்தாலும், மீதம் உள்ள பணயக்கைதிகளை மீட்கும் போராட்டத்தில் இஸ்ரேல் தற்போது இருந்து வருகிறது. இப்படி தொடங்கிய இந்த தாக்குதல், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலாக மாறி இருக்கிறது. நேற்றுடன் (அக்-7) இந்த தாக்குதல் தொடங்கி ஒரு வருடம் […]
ஹைஃபா : கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (அக்-7) ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டனர். அதில், பலரையும் பணயக்கைதிகளாக பிடித்தும் சென்றனர், அவர்களை மீட்கும் பணியிலே தற்போது வரை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது காசா பகுதியில் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கி 1 வருடம் இன்றுடன் நிறைவடைந்த இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் ஒருமுனையில் நடைபெற்று வந்த போது மறுமுனையில் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலை தாக்கினார்கள். […]
லெபனான் : இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில், 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல், கடுமையாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் கூட லெபனான் மீதான தாக்குதலைத் தொடருவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டொனால்ட் […]
லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால் வரும் செப் -7 தேதி (திங்கள்கிழமை) வந்தால் ஒரு வருடம் நிறைவடைந்து விடும். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 42, 000 உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவாக இரான் சமீபத்தில் களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதவராக மத்திய கிழக்கில் உள்ள […]
ஈராக் : சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து இஸ்லாமிய அரசு (ISIS) கடத்திச் செல்லப்பட்ட 21 வயதுடைய இளம்பெண்ணை காசாவில் இருந்து ஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளும் அந்த பெண்ணை மீட்ட வீடியோக்களை வெளியிட்டன. பின்னர், அந்த இளம் பெண் ஈராக்கின் யாசிதி சமூகத்தைச் சேர்ந்த ஃபௌசியா சிடோ என அடையாளம் காணப்பட்டார். ஃபௌசியா சிடோ (Fauzia Sido) என்ற இந்த பெண் சுமார் […]
லெபனான் : கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமான் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இணைந்து இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் இதற்கு பதிலடியாக இஸ்ரேலை […]
லெபனான் : இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா அந்த தாக்குதலுக்கு உயிரிழந்தார் என இஸ்ரேலின் பல ஊடகங்கள் தெரிவித்தது. அப்போது ஈரானின் டஸ்நிம் ஏஜென்சி தலைவர் நஸ்ரல்லா பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவித்தனர். அதன் பின் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. […]
லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர்-7 ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்ப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் இரான் ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பை தாக்கி வந்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொள்ளப்பட்ட்டனர். மேலும், மாறி மாறி நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், 21 நாள் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென […]
லெபனான் : இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே கடந்த ஒரு வருடகாலமாக தீராப்பகை முற்றி வருகிறது. அதிலும், லெபானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடுமையான தாக்குதல் என்பது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்படூர் காயம் அடைந்தனர், பலரது நிலைக் கவலைக் கிடமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய […]