கோவை : கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் எதிர்நோக்கியது போலவே, கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால், பயங்கரவாதிகள் சதி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய […]
காசா : வடக்கு ஈராக்கைச் சேர்ந்த யாசிதி இனத்தைச் சேர்ந்த ஃபாவ்சியா அமின் சிடோ, 2014 பயங்கரவாத ஆட்சியின் போது ISIS ஆல் அடிமைப்படுத்தப்பட்ட பல யாசிதி பெண்களில் ஒருவர். அப்போது, ஃபௌசியாவுக்கு 11 வயது என்று கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அவர் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 21 வயதுடைய அந்த (யாசிதி பெண்) ஃபவ்சியா அமின் சிடோ, ISIS காவலில் […]
ஈராக் : சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து இஸ்லாமிய அரசு (ISIS) கடத்திச் செல்லப்பட்ட 21 வயதுடைய இளம்பெண்ணை காசாவில் இருந்து ஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளும் அந்த பெண்ணை மீட்ட வீடியோக்களை வெளியிட்டன. பின்னர், அந்த இளம் பெண் ஈராக்கின் யாசிதி சமூகத்தைச் சேர்ந்த ஃபௌசியா சிடோ என அடையாளம் காணப்பட்டார். ஃபௌசியா சிடோ (Fauzia Sido) என்ற இந்த பெண் சுமார் […]
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவான ATS பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பெரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் புகைப்படத்தையும் ATS பிரிவு காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் குஜராத் காவல் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் பல்வேறு […]
சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் புகைப்படங்களையும் ATS காவல் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணையை ATS காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Moscow Attack : மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நேரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 5ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுமார் 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த […]
ஈரானின் கெர்மான் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் , 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலேமானியின் நினைவு தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு யாரும் […]
சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை. சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவர் வீட்டில் துணை ஆணையர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிரான பாதுகாப்பு நிலைமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குழு நேற்று வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தியது. துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் பயணத்தின் போது பாதுகாப்பான காணொளி வாயிலாக ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையில், மாநில […]
உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். புலனாய்வுப்பிரிவு ஒரு வருடமாக அபு யூசுப் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் சென்ற அபு யூசுப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அபுயூசுப் வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் முழுவதும் தயார் நிலையில் இருந்தது. எனவே […]
டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை இன்று போலீசர் கைது செய்தனர். தவுலா குவானில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மினசோட்டாவின் செயின்ட் பால் நகரில் உள்ள ஒரு ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் ஜூலை 1 -ம் தேதி ஓரு முஸ்லிம் பெண் ஆர்டர் செய்த காபியில் தனது பெயருக்குப் பதிலாக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைத்தார். சம்பவம் நடந்த நாளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக முகமூடி அணிந்திருந்த ஆயிஷா, காபி ஒன்றை ஆர்டரை செய்யும் போது தனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறினார். ஸ்டார்பக்ஸ் ஊழியர் தன் பெயரைக் கேட்டபோது, நான் மெதுவாக […]
தீவிரவாத கும்பலான ஐஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு உள்ளதாக கூறி இதுவரை எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகிறது என் ஐ ஏ அமைப்பு. தற்போது வெளியான தகவலின் படி இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை போன்ற 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 3 லேப்டப், 3 ஹார்ட் டிஸ்க், 16 செல்போன், பென்ட்ரைவ் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. DINASUVADU
இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். இயக்கத்துக்காக தீவிரவாதம் செய்ய விரும்பியவர் தடுத்து நிறுத்தம்..!! ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக சிரியாவில் சண்டையிட விரும்பிய சிங்கப்பூரை சேர்ந்தவர்களை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 33 வயதை உடைய அகமது ஹுசேன் ,அப்துல் காதர், தகவல் தொழில்நுட்பப் பொறியாளரார்களான இவர்கள் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, சிரியாவில் ஆயுதமேந்திய வன்முறையை மேற்கொள்ள முற்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறுகின்றது. 2013ஆம் ஆண்டில், சமயம் பற்றிய தகவல்களை இணையதளத்தில் தேடிய போது அவர் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு […]
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி பயங்கரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாகவும் மத்திய அரசின் […]
மார்ச் 20, 2003 வரலாற்றில் இன்று – பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்திருப்பதாக பொய்யான காரணங்களைக் கூறி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்பு போரை துவக்கிய நாள் இன்று அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் ஒன்றைக்கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இப்போரின் காரணமாக உலகில் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு அதிகரித்து இந்தியா போன்ற நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி […]
வாட்ஸ் ஆப் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு விமானப்படையின் ரகசியங்களைப் படமெடுத்து அனுப்ப முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி விமானப்படைத் தளத்தில் பணியில் இருந்த குரூப் கேப்டனான அவரை விமானப்படையின் உளவுப்பிரிவினர் கண்காணித்ததில் அவர் சிக்கினார். தான் காதலிக்கும் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அந்த அதிகாரி ரகசிய தகவல்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண், விமானப்படை அதிகாரியை மயக்கி ரகசியங்களைப் பெறுவதற்காக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பி […]