புதிய வண்ணங்களில் அறிமுகமாகும் ட்விட்டரின் சரிபார்க்கப்பட்ட ‘ப்ளு பேட்ஜ்’.!
எலான் மஸ்க், ட்விட்டரின் சரிபார்க்கப்பட்ட ப்ளூ பேட்ஜ்களை அடுத்தவாரம் புதிய நிறங்களில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறார்.
ட்விட்டரின் ‘சரிபார்க்கப்பட்ட ப்ளூ’ சேவையை எலான் மஸ்க் அடுத்தவாரம் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் போலிக்கணக்குகளை முடக்குவதற்காக ‘ட்விட்டர் ப்ளூ பேட்ஜ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தும் மஸ்க் கூறியதாவது, தாமதத்திற்கு மன்னிக்கவும். நாங்கள் இந்த மேம்படுத்தப்பட்ட சேவையில் சில மாற்றங்களுடன் அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்துகிறோம்.
இதன்படி நிறுவனங்களுக்கு தங்க(Gold) நிறமும், அரசாங்க கணக்குகளுக்கு சாம்பல்(Grey) நிறமும், தனிநபர்களுக்கு நீல நிற(Blue) பேட்ஜ்ஜும் வழங்கப்படும் என்று அவர் கூறினார். அனைத்து அதிகாரப்பூர்வ கணக்குகளும் முறையாக சரிபார்க்கப்படும் என்று மஸ்க் கூறியுள்ளார்.