டெல்லி : ஆன்லைன் விற்பனை துறையின் முன்னணி நிறுவனமான அமேசான், தனது 10வது ஆண்டு ‘ப்ரைம் டே’ சிறப்பு ஆஃபர் திருவிழா ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ப்ரைம் உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு விற்பனை நிகழ்வு, இந்த ஆண்டும் பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் புதிய தயாரிப்புகளுடன் நடைபெற உள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த விற்பனை திருவிழாவில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள், ஃபேஷன் பொருட்கள், அழகு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தயாரிப்புகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஆஃபரை முன்னிட்டு அமேசான் தனது ப்ரைம் உறுப்பினர் கட்டணத்திலும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. தற்போது ரூ.1,499 ஆக உள்ள வருடாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் ரூ.999 ஆக குறைக்கப்பட உள்ளது. அதேபோல், ப்ரைம் லைட் உறுப்பினர் திட்டமும் ரூ.599 விலையில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தாண்டு ப்ரைம் டே விற்பனையின் மற்றொரு முக்கிய அம்சமாக, 500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகமாக உள்ளன. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் Samsung, OnePlus உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை இந்த விற்பனை நிகழ்வின் போது அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வங்கி கார்டு தள்ளுபடிகள், EMI வசதிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், கேஷ்பேக் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நன்மைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ப்ரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்பதால், பலரும் ப்ரைம் உறுப்பினர் திட்டத்தில் இணைந்து ஆஃபர்களைப் பயன்படுத்த தயாராகி வருகின்றனர்.
ஆன்லைன் ஷாப்பிங் விரும்பிகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடி திருவிழாவாக கருதப்படும் அமேசான் ப்ரைம் டே 2026, தொழில்நுட்ப சாதனங்கள் முதல் அன்றாட தேவைகள் வரை பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை வழங்க உள்ளது.
