எகிப்தில் தடம்புரண்ட ரயில் – கிட்டத்தட்ட 100 பேர் காயம்!

Egypt's health ministry says at least 100 people have been injured when a train derailed in Egypt yesterday.

நேற்று எகிப்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து தலை நகருக்கு வெளியே 25 மைல் தொலைவில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு உள்ளது. இந்த விபத்தில் 97 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அவ்விடத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து விசாரணை நடத்த ரயிலின் ட்ரைவர் மற்றும் பிற அதிகாரிகளும் அழைத்து செல்லப்பட்டுள்ளனராம்.