தொல்பொருள் ஆராச்சியாளர்கள் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் மற்றும் அவர்களின் நாகரிகங்கள் பற்றி கண்டுபிடித்து வரும் நிலையில் தற்போது 2600 ஆண்டுகள் பழமையான பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய “சீஸ்”-ஐ கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், சுமார் கிமு 688 மற்றும் 525 இடைப்பட்டதாக காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட “சீஸ்” எனப்படும் பாலாடைக்கட்டியை கண்டுபிடித்துள்ளனர். இந்த சீஸ் ஆனது செம்மறி ஆட்டு பாலிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது தொடர்பாக, முன்னாள் ஊழியரும், தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளருமான சுபாஷ் பராப்பை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது. பஞ்சாப் […]
6 வருடங்களுக்கு பிறகு எகிப்து சுற்றுலாவிற்கு விமான பயணத்தை தொடங்கியதுள்ளது ரஷ்யா. கடந்த 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் எகிப்தில் உள்ள தெற்கு சினாயில் ஷார்ம்-எல் ஷேய்க்கிலிருந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் செல்வதற்காக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 224 பேருடன் சென்ற அந்த விமானம் புறப்பட்ட 23 ஆவது நிமிடத்தில் அதன் கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்துள்ளது. மேலும் இந்த விமானம் சினாய் மலைப்பகுதியில் மோதி அதில் பயணித்த 224 பேரும் உயிரிழந்தனர். இதற்கு அந்நேரத்தில் […]
இந்தியாவின் கொரோனா சிகிச்சைக்காக எகிப்தில் இருந்து முப்பது டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் மூன்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே, ஆக்சிஜன், மருத்துவமனை […]
நேற்று எகிப்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து தலை நகருக்கு வெளியே 25 மைல் தொலைவில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு உள்ளது. இந்த விபத்தில் 97 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
எகிப்து: தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு. எகிப்திய தலைநகர் கெய்ரோவின் புறநகரில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மத்திய கெய்ரோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள எல் ஒபூரில் உள்ள மிஸ்ர் அல் அமல் மருத்துவமனையில் காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், முதல் கட்ட […]
எகிப்தில் ஒரு ஸ்கூபா மூழ்காளர் ஆறு நாட்கள் நீருக்கடியில் இருந்து ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். சதாம் அல் கிலானி நவம்பர் 5 ஆம் தேதி அன்று தஹாப் கடற்கரையில் நீருக்கடியில் சென்று 145 மணி 30 நிமிடங்கள்(அதாவது 6 நாள்கள்) கழித்து வெளியே வந்தார். 2016 ஆம் ஆண்டில் சைப்ரஸில் செம் கராபே என்பவர் 142 மணி 74 நிமிடங்கள் நீருக்கடியில் இருந்தார். அதுவே தற்போதைய உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சதாம் […]
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், ஒவ்வொரு நாட்டு அரசும், பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தற்போது பல நாடுகளில் ஊரடங்கில் தாளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், எகிப்து நாத்தில், கொரோனா பொது முடக்கத்தால், முடங்கி கிடைக்கும் சுற்றுலா பயணிகளை கஸாரும் வண்ணம், 301 மில்லியன் எகிப்தியன் […]
எகிப்த் நாட்டில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் காயமடைந்தர். மேலும், 12 கார்கள் தீயில் எரிந்து நாசமாகியது. எகிப்த் நாட்டிலுள்ள கெய்ரோ நகரில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஷுகேர்-மோஸ்டோரோட் என்ற கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப்லைன் உள்ளது. அந்த குழாயிலிருந்து எண்ணெய் கசிந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க போராடினர். […]
சீனாவின் உகானில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாமல் உலகம் நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவை அடுத்து தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகமாக உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் எகிப்து நாட்டில் உள்ள […]
3000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்த மம்மிக்கு குரல் எப்படி இருக்கும் என்பதை மானுடவியல் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர். இந்த குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும்,எதிர்காலத்தில் நெஸ்யமன்னின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கிமு 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த பாரோ ரமேசஸ் IX இன் கீழ் நெஸ்யமன் வாழ்ந்தார். இந்த நிலையில் எகிப்தில் உள்ள தீப்த் என்ற இடத்தில் கிமு 1099-1069 இந்த காலகட்டத்தில் வாழ்ந்த […]
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. எகிப்து வெங்காயத்தை முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த வெங்காயம் மக்கள் மத்தியில் சிறிது பீதியை ஏற்படுத்தியது. […]
இன்றைய நாகரீகமான உலகத்தய் பொறுத்தவரையில் அனைத்துமே நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. நாம் சைக்கிளில் பயணம் செய்த அனுபவம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், அனா சைக்கிளை நாம் சாலையில் தான் ஓட்டியிருப்போம். ஆனால், இங்கு எகிப்தில் சைக்கிளை தண்ணீரில் ஓட்டுகிறார். எகிப்தில் உள்ள நைல் நதியில், இரண்டு மிதவைக்கு நடுவில் சைக்கிளை பொருத்தி வைத்துள்ளனர். அந்த சைக்கிளை நைல் நதியில் தண்ணீரில் விட்டு, அதனை மிதித்தால், சைக்கிள் நதியில் நகர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எகிப்து ஆற்றில் சைக்கிள் ஓட்டும் […]
உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரமாக எகிப்தின் கலாச்சாரத்தை கூறப்படுகிறது.. தற்போது உள்ள எகிப்து நாட்டில் ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் உடன் நகைகள் மற்றும் நாயணங்கள் உள்ள ஒரு கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் பழங்கால கட்டிடங்கள், மண்பாண்டங்கள் போன்றவைகளும் உள்ளனர்.இவை அனைத்தும் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. […]
எகிப்தில் 40 மம்மி பதப்படுத்தப்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கைரோவிற்குத் தெற்கே உள்ள மின்யா என்னும் இடத்தில் நான்கு கண்டுபிடிக்கப்பட்டது.அந்த புதையிடங்களில் 9 மீட்டர் ஆழத்தில் மம்மிகள் இருப்பது தெரியவந்தது. கல்சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த அந்த மம்மி சடலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். இந்த சடலங்களில் 12 சடலங்கள் சிறுவர்கள் சடலம் என்றும் , சடலங்களின் முழுமையான அடையாளம் கண்டறியப்படவில்லலை அனால் இந்த சடலங்கள் முக்கிய பதவிகளில் இருந்த அதிகாரிகள் உடல்களாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இந்த சடலங்கள் (கி.மு 305-30) ஆண்டின் டோலேமிக் […]