கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை சம்பளம் வரும் ஜனவரி முதல் இரண்டு மில்லியன் டாலர் ஆகும்.
அதுபோக, 240 மில்லியன் அளவுள்ள கூகுள் நிறுவன பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சி.இ.ஓ-வாக பதவி உயர்வு அடைந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் முதலில் கூகுள் நிறுவனத்தின் குரோம், பிரவுசர், டூல்பார் ஆகிய தலங்களை உருவாக்கும் குழுவின் தலைமை வகித்தார்.
அதன்பின்னர், 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பணியமர்த்தப்பட்டார். அண்மையில் இவருக்கு கூடுதல் பொறுப்பாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியும் கொடுக்கப்பட்டது.
வரும் ஜனவரி முதல் அவருக்கான சம்பளம் ஆனது 2 மில்லியன் டாலர் ஆகும். அதாவது 14.22 கோடியாகும். அதுபோக 240 மில்லியன் (ஷேர்) பங்கும் கொடுக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு 1200 கோடி ஆகும்.