ரஷ்ய அதிபர் புதினுக்கு கேன்சர் தீவிரம்.? தன்னை அறியாமல் இயற்கை உபாதை வெளியேறிய துயரம்.!
ரஷ்ய அதிபர் புதின் அதிபர் மாளிகை படிக்கட்டில் வருகையில் கிழே விழுந்து அடிபட்டது. அப்போது அவர் கட்டுப்பாட்டை மீறி உடலில் இருந்து இயற்கை உபாதை வெளியேறியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் தலைநகர் மஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டில் இறங்கி வந்த போது தடுமாறி கிழே விழுந்துள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தவறி விழுந்த அவர் உடலில் இருந்து அவர் கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே புதினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதனால் வயிறு, குடல் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள செய்திகள் ஏற்கனவே வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகளில் கீழே விழுந்த புதினுக்கு, அவரது முதுகுதண்டின் அடிப்பகுதி எலும்பு பாதிப்படைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.