அலாஸ்கா :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது. துருக்கியில் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படவில்லை, ஆனால் கைதிகள் பரிமாற்றம் மற்றும் காயமடைந்த வீரர்களுக்காக தற்காலிக போர் நிறுத்தம் போன்ற சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன், நேற்றைய தினம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அலாஸ்காவில் தரையிறங்கினார். அதன்படி, அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
இருவருக்கும் இடையே அலாஸ்காவில் நடந்த மூன்று மணி நேர பேச்சுவார்த்தையில்,பெரியதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும், டிரம்ப் இந்த சந்திப்பை நல்ல தொடக்கமாகக் கருதினார், மேலும் புதின் மாஸ்கோவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை முடிந்த பின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் முன், எந்த ஒப்பந்தமும் கிடையாது என்றும், போர் நிறுத்தம் தொடர்பாக ஜெலன்ஸ்கி, நேட்டோ தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனை தோடர்ந்து பேசிய புதின், ”நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். அந்த சமயத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் போரே வந்திருக்காது என்று டிரம்ப் கூறியதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எங்களுடைய பாதுகாப்புக்கு உக்ரைன் செயல்பாடுகள் அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
