ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள நகரத்தின் பெரிய பில்டிங் மீது வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் மோதி வெடித்து சிதறியது. இதனால் நகரின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது ரஷ்ய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கசான் நகரத்தில் உக்ரைன் நடத்திய, இந்த ஆளில்லா ட்ரோன் தாக்குதல் 9/11 பாணியில் இருப்பதாக பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த கசான் நகரம் மாஸ்கோவிலிருந்து […]
ரஷ்யா : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு கிரெம்ளின் மாளிகை பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டிற்கு சென்றபோது இந்தியா வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்ததது. இந்நிலையில், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். ‘சரியான தேதிக்காக காத்திருக்கிறோம்’ என்று அந்நாட்டு கிரெம்ளின் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவார் என […]
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருவதால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தற்போது வரை கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த […]
ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது […]
உக்ரைன் போர் முடிவுக்கு வர ரஷ்யா விரும்புவதாக அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைனில் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், சண்டை முடிந்தவரை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் புடின் கூறியதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் (SMH) தெரிவித்துள்ளது. “எங்கள் இலக்கு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம்,எனவே இவை அனைத்தும் முடிவடைவதை உறுதி செய்ய முயல்வோம், விரைவில் சிறப்பாக செயல்படுவோம்” என்று புடின் […]
உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா காட்டம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, இந்தியாவிற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. உக்ரைனியர்கள் இங்கே அவதிப்பட்டு, ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்க இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது கொஞ்சமும் முறையல்ல என்று டிமிட்ரோ குலேபா, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்கள் போரில் இறந்து கொண்டிருப்பதால் தான் ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் எண்ணெயை வாங்க, இந்தியாவுக்கு […]
உக்ரைனின் பக்முட் பகுதியை ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கி இன்னும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும், ரஷ்யா அளவுக்கு அவர்களால் போரில் பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போது ரஷ்யாவின் அடுத்த ரகசிய நகர்வு பற்றி பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முட் எனும் நகரை வடக்கு மற்றும் தெற்கில் […]
திங்கட்கிழமை அதிகாலை கியேவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா இன்று காலை தாக்குதல் நடத்தியது, பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரேனிய மக்களின் வலிமை மற்றும் நெகிழ்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்தது. More desperate and reprehensible Russian attacks this morning […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் தொடர்ந்து போர் நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் மோஸ்க்வா எனும் போர்க் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போரில் இதுவரை 500 பீரங்கிகள், 82 போர் விமானங்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை தங்கள் இழந்துள்ளதாகவும் ரஷ்யா சார்பில் கூறப்படுகிறது. தற்பொழுதும் கடலில் மூழ்கியுள்ள ரஷ்யாவின் இந்த பிரமாண்டமான போர்க்கப்பல் குறித்து உக்ரைன் தரப்பில் கூறும்போது, தங்கள் ஏவுகணை […]
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருவதால் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆகியோர் ரஷ்யாவுக்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது. மேலும், 228 ஆஸ்திரேலியா சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் 130 நியூசிலாந்து […]
“உக்ரைனில் வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு உள்ள நிலைமையில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.