வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,நேற்றைய தினம் அலாஸ்காவில் உள்ள ஜாயின்ட் பேஸ் எல்மென்டோர்ஃப்-ரிச்சர்ட்சனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இந்த உச்சிமாநாடு உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மையமாகக் கொண்டிருந்தது, ஆனால் எந்தவொரு உறுதியான அமைதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
3 மணி நேர பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் மாஸ்கோவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அதிபர் டிரம்ப் காட்டி வரும் தனிப்பட்ட ஈடுபாட்டுக்கு நன்றி தெரிவித்த புதின், மோதல்களுக்கான அனைத்துக் காரணங்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விரைவில் அமைதி இலக்கை எட்டுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு, ஜெலன்ஸ்கி இன்று டிரம்புடன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது, நீண்ட உரையாடல் நடத்தியதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி திங்கட்கிழமை அன்று வாஷிங்டனில் டிரம்பை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
unknown nodeஇந்த சந்திப்பில் உக்ரைன் போர், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் ஐரோப்பிய ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். டிரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சந்திப்பு நடத்துவதற்கான சாத்தியத்தையும் பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை அது உறுதிப்படுத்தப்படவில்லை.
