காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

அமெரிக்க பொருட்கள் மீது சீனா விதித்த 34% வரியை நீக்காத காரணத்தால், அமெரிக்காவில் சீனா பொருட்கள் மீதான வரி கூடுதல் 50% உயர்ந்துள்ளது. இதனால் சீன பொருட்கள் மீதான வரி 104% வரை உயர்ந்துள்ளது.

US President Trump - China President

வாஷிங்டன்: கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற நாடுகள் என்ன இறக்குமதி விதிக்கிறதோ, அதனை கணக்கிட்டு அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் போதும் அதே அளவு வரி இருக்கும்படி புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அதனை அடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி 34% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, கடந்த ஏப்ரல் 4 அன்று, சீனா, அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி உயர்வுக்கு பதிலடி கொடுத்தது.

தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப், சீனா அரசு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை திரும்ப பெறவேண்டும் இல்லை என்றால் ஏப்ரல் 9க்கு பிறகு சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் வரியை உயர்த்தி 50% வரி விதிக்கப்படும் என சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார் .

ஆனால், டிரம்ப் கொடுத்த காலக்கெடு நேற்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, சீனா தனது வரி விதிப்பை திரும்ப பெறாத காரணத்தால் இன்று (ஏப்ரல் 9) முதல் சீனா பொருட்கள் மீதான கூடுதல் 50% பரஸ்பர வரி அமலுக்கு  வந்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே 34% வரி , தற்போது கூடுதலாக 50% அபராத பரஸ்பர வரி என சீன பொருட்கள் மீது 104% வரையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பானது அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போரை எழுப்பியுள்ளது. இது உலக வர்த்தகத்தை பாதிக்கும் சூழல் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!