பெய்ஜிங் : கொரோனா காலத்தை யாரு தான் மறக்க முடியும்? அந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா அச்சத்தை பார்த்து எத்தனை பேர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். கொரோனா பாதிப்பு இப்பொழுது இல்லை என்றாலும், அவ்வபோது கொரோனா தொற்று போலவே சில வைரஸ் தொற்று பரவுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை தற்போது கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் Shi Zhengli அறிவித்துள்ளார். […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை செயல்படுத்தும் வகையில் தற்போது பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், அதன் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாயை ஈட்டும் நோக்கிலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். 2வது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு கையெழுத்திட்டு வருகிறார். எந்த நாட்டு தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தால் என்ன, அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நோக்கத்தில் அவரது அதிரடி முடிவுகள் அமைaaந்து வருகின்றன. ஏற்கனவே, கொரோனாவில் சரிவர முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கவில்லை எனக் கூறி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக […]
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல் அதற்குள் கார் செல்வதால் தடுமாறும் நிலையோ, அதிக சஸ்பென்ஷன் திறன் இருந்தாலும் அந்த மேடு பள்ள தடைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, சீனா கார் தயாரிப்பு நிறுவனமான BYD நிறுவனம் புதிய கார் ஒன்றை தயாரித்துள்ளது. Yangwang U9 எனும் பெயரிடப்பட்ட இந்த மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், காரில் சென்று […]
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப் பகுதியில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு உள்ளார் நேரப்படி மாலை 5:32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், டோரிஷிமா தீவுகளின் அருகிலுள்ள கடலில் உணரப்பட்டுள்ளது. ஜப்பானிய நில அதிர்வு அளவு 7 இல் 2 ஆக இருந்தது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) […]
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த HMPV தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதியானது. இது சீனாவில் இருந்து பரவிய தொற்று அல்ல என்றும், இந்த […]
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் – திபெத் எல்லையில், இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. ஏற்கெனவே, நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, […]
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது என யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே […]
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும் மறக்க இயலாது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் இருந்து தான் பரவியது. அதே போல தற்போது Influ A, HMPV வைரஸ்கள் அங்கு பரவுகின்றன. இதனை வெளி உலகத்திற்கு சீனா மறைக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை […]
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உறுதி செய்துள்ளது. சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு […]
சீனா : இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று (10) கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து சீனா தூதர் இலங்கை பிரதமரிடம் சீருடைகளை வழங்கினார். சீனா வழங்கியுள்ள அந்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளது. ஏற்கனவே, முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 25-ஆம் தேதி மூன்றாவது தொகுதியாகவும் […]
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. வசூல் ரீதியாக படம் 100 கோடி வசூல் செய்து விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தமிழில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற […]
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகார் மாநிலம் ராஜ்கிரில் ராஜ்கிரில் நவ.11ம் தேதி முதல் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இந்த லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் என்ற முறையில், 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முன்னேறி […]
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்த லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் இறுதியில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அதன்படி, இந்திய மகளிர் […]
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான் இன்று வழக்கம்போல் 80க்கும் மேற்பட்டோர் மையத்தில் உள்ள சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, அந்த மையத்திற்குள் ஒரு சிறிய எஸ்யூவியை காரை ஒட்டிக்கொண்டு வேகமாக நபர் வந்தார். அங்குக் கூட்டமாக அவர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்த்தும் காரை நிறுத்தாமல் வேண்டுமென்றே சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தவர்களை வேகமாகக் காரை வைத்து மோதத் தொடங்கினார். அங்கிருந்தார்கள் தங்களுடைய […]
லடாக் : கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தற்போது மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. அதாவது, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை விலக்கி வருகின்றனர். இருப்பினும், இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WATCH | Leh, Ladakh | On the agreements […]
டெல்லி : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். நேற்று முன் தினம் ரஷ்யாவில் 16ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதன்படி, ரஷ்யாவில் இருந்து இன்று அதிகாலை டெல்லிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. 10 வருடத்திற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தற்போது 2024 ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கடலந்து கொண்டார். […]
சீனா : நடைபெற்று வந்த ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய அணியின் இரட்டையர் பிரிவில் ஜீவன்-விஜய் ஜோடி பங்கேற்று விளையாடி வந்தனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியின் இரட்டையர் ஜோடியான கான்ஸ்டான்டின் மற்றும் ஹென்ட்ரிக்கை எதிர்த்து விளையாடினார்கள். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் செட்டில் தோல்வியடைந்தார். ஆனால் அங்கிருந்து மீண்டெழுந்த இந்திய ஜோடி அடுத்ததாக நடைபெற்ற இரண்டு செட்டையும் வெற்றிப் பெற்றது. இறுதியில், 4-6, 7-6, […]
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இவர் வாஷிங்டன்னில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செவ்வாய்) பேட்டியளித்து இருந்தார். அப்போது இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இந்தியா – சீனா விவகாரம் : அப்போது இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து பேசிய ராகுல் காந்தி , இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கில் […]
சீனா : சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திரு லீ (80) என்ற முதியவர் முதியோர் இல்லத்தில் பணிபுரியும் இளம் பெண்ணான சியாஃபங் (23) மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டார்கள். காதலித்ததை தொடர்ந்து சியாஃபங் வீட்டில் கல்யாண […]