12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி-ஜோ பிடன்
அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி ஆண்டுதோறும் கட்டாயம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.இது கொரோனாவின் மறுபாடுகளிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் என்றார்.
இந்த வாரம் முதல் மருந்தகங்கள், மருத்துவர் அலுவலகங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் மற்றும் பிற இடங்களில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த புதிய இலையுதிர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்,என்று கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டபோது இல்லாத கோவிட்-19 வைரஸின் புதிய ஓமிக்ரான் உருமாற்றத்திலிருந்து இந்த புதிய தடுப்பூசி வலுவான பாதுகாப்பை வழங்குகிறது என்று ஜோ பிடன் கூறினார்.