டி20 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.போட்டியின் ஆடுகளம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், “நாங்கள் இதே போன்ற மைதானத்தில் நாம் ஏற்கனவே விளையாடியுள்ளோம், எனவே என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் கொஞ்சம் அனுபவம் உள்ளது. இது நாம் பழகியதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதுவே விளையாட்டின் தன்மை,” என்று கூறினார். இப்போட்டியில் இந்திய அணியில் நான்கு ஆல்-ரௌண்டர்களுடன் களமிறங்குகின்றனர். இந்தியா: ரோஹித் […]
ஐ.சி.சி. 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகை 11.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்துள்ளது. இதில், வெற்றி பெறும் அணிக்கு குறைந்தபட்சம் $2.45 மில்லியன் வழங்கப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு $1.28 மில்லியன் வழங்கப்படும், மற்றும் அரையிறுதியில் தோற்கும் அணிகள் ஒவ்வொன்றும் $787,500 பெற்றுக் கொள்ளும். இரண்டாம் சுற்றை தாண்டாத அணிகள் ஒவ்வொன்றும் $382,500 பெறுவார்கள். 9 முதல் 12 ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் $247,500 பெற்றுக் கொள்வார்கள். 13 முதல் 20 […]
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் […]
சென்னை கட்டுப்பாட்டு அறையில், மழை பாதிப்புகளை அமைச்சர் நேரு நேரடியாக கண்காணித்து வரும் நிலையில், மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் நேருவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இந்த நிலையில், அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாநகராட்சி சார்பாக 990 பம்புகள் மூலமாக தண்ணீர்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், சில இடங்களில் மோட்டார் மூழ்கி போவதால், அங்கெல்லாம் புது மோட்டார் பொருத்தப்படுகிறது. மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரிடம் […]
இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறும். 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், நாளை ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கு 110கி.மீ தொலைவில் புயல்..! இன்று இரவு வரை […]
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மிரட்டும் மிக்ஜாம் புயல்… தமிழகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்… வெளியான முக்கிய தகவல்.. இன்று […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளதால், இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெய்த மழையால், பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையின் தரைத்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து! இந்த […]
மிகஜாம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிர்வங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு […]
இன்று பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மக்களே உஷார்..! அடுத்த 12 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு..! இந்த நிலையில், இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது. இந்திய அணி களமிறங்கிய பின், அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்தது. முதலில் பேட்டிங் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..! மேலும், இந்த 4 மாவட்டங்களிலும், கல்வி நிறுவனங்கள், […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! கனமழை […]
உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஐபிஎல் 2024க்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இதுவரை 16 சீசன் ஐபிஎல் டி20 லீக் நடந்துள்ளது. 17-வது சீசனுக்கான ஏலம் துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், அடுத்த ஆண்டில் ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும், என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்று அதாவது நவம்பர் 26 ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), […]
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, 26/11 மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியப் பொருட்களின் மீதான இந்த உணர்வு பண்டிகைகளுக்கு மட்டும் வரக்கூடாது. திருமணங்கள் தொடர்பான ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆம், திருமணம் என்ற தலைப்பு வந்தவுடன், ஒரு விஷயம் என்னை நீண்ட காலமாக தொந்தரவு […]
ஐபிஎல் 2024க்கான தக்கவைப்பு பட்டியலை வெளியிடும் கடைசி நாளான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ‘டிரேடிங் முறை’ வீரர்களை மாற்றி கொண்டனர். இதில், இரு அணிகளும் தலா ஒரு வீரரை மாற்றிக்கொண்டன. ஷாபாஸ் அகமது பெங்களூர் அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வந்துள்ளார். அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் மயங்க் டாகர் பெங்களூர் அணிக்கு வந்துள்ளார். ஐபிஎல் 2022க்கு முன் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஷாபாஸ் அகமதுவை ரூ.2.4 கோடிக்கு […]
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கை 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இந்த போர் தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை சற்று குறைந்துள்ள நிலையில் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யா நேற்று ஒரே இரவில் கிய்வ் மீது […]
சென்னை மெரினா கடற்கரையில் தினமும் தங்களது பொழுதை போக்குவதற்காக மக்கள் கூடுவது வழக்கம். பொதுமக்களுக்கு மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகளை கடற்கரையை ரசிக்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக மெரினா கடற்கரையில் காவல்துறை தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி […]
கேரளா, கொச்சி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மக்கள் கூடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், […]