நோவக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனதற்காக வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார். முதலில் ஜோகோவிச்சுக்கு, ஆஸ்திரேலியாவில் நுழைய விசா வழங்கப்பட்டாலும் மெல்போனில் நிலவிய கடுமையான சட்டத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோகோவிச், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபனில் கலந்து கொள்வதற்கான செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50,342 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,090 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,00,204 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,14,27,81,911 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 36,31,977 டோஸ் கொரோனா […]
அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி ஆண்டுதோறும் கட்டாயம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.இது கொரோனாவின் மறுபாடுகளிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் என்றார். இந்த வாரம் முதல் மருந்தகங்கள், மருத்துவர் அலுவலகங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் மற்றும் பிற இடங்களில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த புதிய இலையுதிர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்,என்று கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டபோது இல்லாத கோவிட்-19 வைரஸின் புதிய […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,379 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50,594 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,057 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,38,93,590 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,13,91,49,934 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 18,81,319 டோஸ் கொரோனா […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 21,411 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,279 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,52,200 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை […]
டெல்லி:கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவர்கள்,தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்,அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா மற்றும் நிதி ஆயோக் […]
தமிழகத்தில் நாளை 8 -வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் விதமாக நாடு முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 7 வாரங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 5 வாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முகாம் கடந்த இரண்டு வாரங்கள் மது பிரியர்கள் மற்றும் அசைவ விரும்பிகளுக்காக சனிக்கிழமை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் […]
மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி போடும் முகாமும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட கல்வா எனும் பகுதியில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் இன்று […]
நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பதால், அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசியை குறித்த வதந்திகளால் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் 124 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனால் வீடு வீடாக சென்று அம்மாவட்ட அரசு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. அப்போது, 124 வயது கொண்ட […]
குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தற்போது எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,குஜராத்தில் உப்லெட்டாவில் வசிக்கும் ஹரதாஸ்பாய் கரிங்கியா […]
புனேவில் கடந்த திங்கள் கிழமையன்று, முதல் முறையாக டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தை ஹடஸ்பரில் உள்ள ஆடிட்டோரியத்தில் திறந்து வைத்துள்ளனர். ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் இங்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கியுள்ளது. புனே முனிசிபல் கார்பெரேஷன் தொடங்கியுள்ள டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தில் முதல் நாளில் 64 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் முன்னுரிமை அளிக்கும் மையங்களில் இதுவே இந்நகரத்தின் முதல் தடுப்பூசி மையமாகும். இதை திறந்து வைத்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் […]
கொரோனா தடுப்பூசி மையங்கள் அருகில் இருப்பதைக் கண்டறிய மத்திய அரசானது வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல் ஆகியவைதான் சிறந்த வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து,கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 முதல் 65 […]
18 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைத் தொடர்ந்து மே 1-ந் […]
கொரோனா பரவல் காரணாமாக ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையானது அதிகமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, ஏற்கனவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால்,அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து பள்ளிக்கு வருகைப் புரிந்து மாணவர் சேர்க்கை […]
கொரோனா தடுப்பூசிகள் வைத்திருப்பதில் உலக நாடுகளிடையே பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்கின்றன.இதனால் ஆசியா,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்றடையாமல் இருக்கின்றன. இந்த நிலையில்,கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளி வழங்கப்படும் என்று கர்நாடகவின் பிஜாப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.மேலும்,ஒவ்வொரு நாளும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில்,கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இறப்பு ஏற்படும் மற்றும் உடல்நிலை பாதிக்கப்படும் போன்ற சில வதந்திகளால் வடமாநிலத்தில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்படுகின்றனர். […]
தென்கரியாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வேறு சில நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது தீவிரமாகி வரும் நிலையில், இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் […]