அனைத்து பல்.கழகங்களும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் – உயர்கல்வித்துறை உத்தரவு!

The higher education department instructs all university registrars to modify the university curriculum.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்.கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்னர்,தமிழ்,புள்ளியியல்,கணித பாடங்களை மட்டும் ஆய்வு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.