பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்.கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்னர்,தமிழ்,புள்ளியியல்,கணித பாடங்களை மட்டும் ஆய்வு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சமூக வலைதளங்களில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று யுஜிசி அனுப்பியதாக வெளியான கடிதம் போலியானது. கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் திறப்புக்கு முன்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்த […]
ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் “தாக்குதல் ஆயுதத்துடன்” நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது துப்பாக்கி சூடு நடுநிலைப்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.