சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறையில் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள 15 திட்டங்கள் குறித்து அறிவித்தார். அவை, அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவகையில் 6 புதிய பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 21 […]
தொலைதூர கல்வி நிறுவங்களில் பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நேரடி கல்லூரி வகுப்பில் பயிலாதவர்கள் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இதுகுறித்து மேலும் கூறுகையில் , தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பயின்று வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் ஆசியராக பணியாற்ற தகுதிஇல்லாதவர்கள். அதற்கு […]
பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்.கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்னர்,தமிழ்,புள்ளியியல்,கணித பாடங்களை மட்டும் ஆய்வு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாரதியார் பெயரிலும்,வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரிலும்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெற்று பதிவாளர்கள் பணிகளை தொடங்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,திருவள்ளுவர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி,வரும் செமஸ்டர் தேர்வுகளிலேயே 20% தேர்வை காகிதமில்லா முறையில் நடத்தவும் […]