"கல்வியில் அரசியல் நிலைப்பாட்டை திணிக்க கூடாது" – தர்மேந்தர பிரதான்.!

கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

dharmendra pradhan

சென்னை :மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற ‘இன்வென்டிவ் 2025′ கண்காட்சியை காணொலி வழியாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முதலில் நேரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மறுத்தது தொடர்பாக எழுந்த எதிர்ப்பு காரணமாக, அவர் காணொலி வழியாகவே பங்கேற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”இந்த ஆண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி சார்ந்த நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்க கூடாது.

தமிழகத்தில் அரசு மும்மொழி கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. மும்மொழி கற்பதில் என்ன பிரச்னை? மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை தர முடியும். மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள், நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்.

கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் . தாய்மொழியுடன் ஏதாவது இரு மொழிகளை கற்கலாம் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். மாணவர்கள் 10 மொழிகள் கற்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுவதாக’ விளக்கம் அளித்துள்ளார்.