டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி மொழி குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு […]
திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பது போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது என தமிழகத்தில் திமுக, அதிமுக , விசிக, காங்கிரஸ், நாதக, தவெக என அனைத்து கட்சியினருமே எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். அன்பில் […]
சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
டெல்லி : மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது சர்ச்சையாக மாறுவதற்கு காரணமே புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தான். இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் சூழலில் சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் […]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ (UNESCO) 1999ல் இந்த நாளை மொழிவழி உரிமைகளுக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூர அறிவித்த நிலையில், அப்போதிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தாய்மொழி தினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் […]
டெல்லி : கடந்த சனிக்கிழைமை வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“ புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது. தமிழ்நாடு அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய […]
சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும் என பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, த.வெ.க தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். இருப்பினும், இது குறித்து எதிர்க்கட்சி […]
சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும்” என்றும், “மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாடு ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?” எனவும் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையடுத்து, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]
உத்தரப் பிரதேசம்: வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்த கொண்டனர். அப்பொழுது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், “நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே […]
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக UGC பரிந்துரைப்பவரும், மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, யூ.ஜி.சி புதிய விதியை கொண்டுவந்துள்ளது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் யுஜிசி புதிய நெறிமுறைகள் திரும்பபெறவேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவிப்பு. தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லுரிகள் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் […]
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் கணக்கில் ஜெ.இ.இ. மேம்பட்ட 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு – ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார்.ஜே.இ.இ மெயினில் முதல் 2.5 லட்சத்தில் இடம் பெறுபவர்கள் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கு தேர்வு செய்ய தகுதியுடையவர்கள். JEE மேம்பட்ட தேர்வு 2021 […]
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எப்போது தொடங்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில்,நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து நீட் தேர்வு விண்ணப்பத்தை நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் […]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். பீகார் நீதிமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு முசாபர்பூரில் உள்ள தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் […]
கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை தற்போது மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது தான் இதற்கு காரணம் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் விளக்கமளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் […]
பெட்ரோல், டீசல் விலைகளுடன் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை எல்லா நேரத்திலும் உயர்ந்தது. தனது கிராமத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 எட்டியதாக கூறினார். விலைகளை முறைப்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்குமா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், வேணுகோபால் ஜி ஒரு புத்திசாலி உறுப்பினர் மற்றும் ஒரு […]
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதை அடுத்து சிகிச்சைக்கு பின்அவர் கொரோனாவிலிருந்து மீண்டார். இந்நிலையில் கொரோனாவால் மீண்ட பலர் தங்களது பிளாஸ்மாக்களை தானம் செய்து வருகின்றனர்.ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் நேற்று தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்து உள்ளார். பிளாஸ் தானம் செய்த பிறகு பேசிய அவர் கொரோனா […]
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #COVID19 के लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया जिसमें मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। डाक्टरों की सलाह पर मैं अस्पताल में भर्ती हूँ और स्वस्थ हूँ। — Dharmendra Pradhan (@dpradhanbjp) August 4, 2020 இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் […]
இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா நாட்டில் உள்ள பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்கப்பட்டதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது […]