‘எது நல்ல உறவு எது கள்ள உறவு’.! நித்தியானந்தாவின் புதிய சொற்பொழிவு.!
- பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவின் சர்ச்சை பேச்சி வந்த வண்ணமே உள்ளது.
- எத்தகைய உறவாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் நேர்மையாக இருப்பதே, கற்பு என சாமியார் நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார்.
பல காலமாக பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் அவரது சத்சங்கம் (சத்-சத்தியம்,சங்கம்-உடனிருத்தல்) மூலம், சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு ஆற்றிய உரையில், கடந்த 2010-ம் ஆண்டு தன்னை எவ்வித ஆதாரமின்றி பாலியல் வழக்கில் கர்நாடகா அரசு தன்னை கைது செய்ததாகவும், கைது செய்த பின்னரே சாட்சிகளை கூவி கூவி அழைத்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து பேசிய அவர், தனது சத்சங்கத்தின் உண்மையான பேச்சை கேட்போர் தூக்கம் வந்தால், டீ குடித்துவிட்டு வந்து கேட்குமாறும், அரை போதையில் உள்ளவர்கள், முகத்தில் தண்ணீர் தெளித்துகொண்டு வந்து சத்சங்கத்தை கேட்குமாறு தெரிவித்தார். மேலும் கள்ள உறவிற்கு தனி விளக்கத்தையே கூறியுள்ள நித்தியானந்தா, ஒருவர் கொடுத்த கமிட்மென்டுக்கு நேர்மையாக இருந்தால் அது நல்ல உறவு எனவும், கொடுத்த கமிட்மென்டுக்கு யார் நேர்மையாக இல்லையோ அது கள்ள உறவு என்றும் தெரிவித்தார்.