"திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் கொடுக்க மாட்டோம்" – தவெக தலைவர் விஜய்.!

சொன்னார்களே செய்தார்களா? வடிவேலு ஒரு படத்தில் காலி பாக்கெட்டை எடுத்து காட்டுவதுபோல் வாக்குறுதிகள் நிலை உள்ளது என்று விஜய் நக்கல் செய்திருக்கிறார்.

vijay - tvk - namakkal

நாமக்கல் :தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ். திரையரங்கம் அருகே பரப்புரையில் ஈடுபட்டார். மக்கள் மத்தியில் பரப்புரை செய்த விஜய், ”வாக்குறுதி 50, 66, 68, 152 இதெல்லாம் சொன்னாங்களே செஞ்சாங்களா..? தி.மு.க. எம்.எல்.ஏக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடக்குது, அது த.வெ.க. ஆட்சி அமைந்ததும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தவெக தலைவர் விஜய் ஆவேசசமாக பேசினார்.

இது தொடர்பாக விஜய் பேசுகையில், ”நாமக்கல்லுக்கு அது செய்வோம் இது செய்வோம் என சொன்னார்களே, செய்தார்களா? ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்கு அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே, செய்தார்களா? தானிய சேமிப்பு கிடங்குகள், கொள்முதல் நிலையங்கள் இணைக்கப்படும் என சொன்னார்களே, செய்தார்களா?நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியதா?

இது எப்படி இருக்குன்.. ஒரு படத்தில் வடிவேலு Empty பாக்கெட்டை காட்டுவாரே. அதேபோல் தான் இவர்கள் (திமுக) கொடுத்த வாக்குறுதிகளும். ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்துவிட்டு, நாமும் அதேபோல் Empty பாக்கெட்டை காட்ட வேண்டியது தான்’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”விஜய் எங்கே சென்றாலும் கேள்விகளாய் கேட்கிறார்? அவர் என்ன செய்வார் என கேட்கிறார்கள்? எல்லோரும் சொல்வதை தான் விஜயும் சொல்கிறார்கள் என்கின்றனர். நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளையே கொடுப்பேன். தி.மு.க. போல் செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம்.

நல்ல சோறு, நல்ல குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து, சாலை வசதி, பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் அடிப்படை தேவை, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறோம். நிறைவேற்ற முடியும் என்பதை மட்டுமே நாங்கள் சொல்கிறோம்.

அய்யா அரசியல் மேதைகளே..? புதுசா வாக்குறுதி சொல்லனுமா..? செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும்.. அவரு அடிச்சி விடுவாரே அந்த மாதிரி அடிச்சி விடுவோமா..? பாசிச பா.ஜ.க. அரசோடு ஒத்துப்போகமாட்டோம், தி.மு.க அரசு மாதிரி, பாஜகவோடு அண்டர்கிரவுண்டு டீலிங்கில் இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.