வேகமாக பரவி வரும் சிறுவனின் வீடியோ! அது சுஜீத் இல்லையாம்!

திருச்சி, மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40க்கு அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் 2 வயது சிறுவன் சுஜித். அவனை மீட்க நான்கு நாட்களாக மீட்பு குழுவினர் போராடினர்.
சுஜீத்தை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடியவே நேற்று இரவு சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர், இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
சிறுவனின் உடலுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அனைவரும் தங்கள் இரங்கலை வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுஜித் நடனமாடும் வீடியோ என ஒரு வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. உண்மை ஆராய்ந்ததில் அச்சிறுவன் சுஜீத் இல்லை எனவும், அச்சிறுவன் வேறு ஒருவன் எனவும், தவறாக பகிரப்பட்டு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அச்சிறுவன் பற்றிய உண்மை நிலவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025