வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வெளியில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் இவர்களின் விபரங்களை அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
unknown nodeஇந்த நிலையில் அறிவுறுத்தப்பட்டு பயணிகள் வெளியே நடமாடுவது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் சிலர் வெளியே சுற்றுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். இதையடுத்து அரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.