தொண்டர்கள் வீசிய துண்டை தோளில் சுமந்து சென்ற தவெக தலைவர் விஜய்.!

தவெக கட்சித் தலைவர் விஜய் மாநாடு நடைமேடையில் நடக்கும் போது கட்சி தொண்டர்கள் கட்சி துண்டுகளை விஜயிடம் கொடுத்தனர். அதனை தனது தோளில் அணிந்து சென்றார்.

TVK Vijay wear Party Towel

விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு தற்போது விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு தொடங்கியதும் மேடையை நோக்கி அமைக்கபட்ட பிரமாண்ட நடைமேடையில்  தவெக தலைவர் விஜய் நடந்து வந்தார்.

அப்போது இரு பக்கத்தில் இருந்தும் கட்சி தொண்டர்கள் தவெக கட்சி துண்டை அன்பாக வீசினர். அதனை லாவகமாக எடுத்து தோளில் அணிந்து தனது ரோம்ப் வாக் சென்றார் தவெக தலைவர் விஜய்.  இதனை கண்ட மற்ற தொண்டர்களும் அதே போல விஜயை நோக்கி துண்டுகள் வீச தொடங்கினர்.

அதனை எடுத்து மீண்டும் தொண்டர்கள் நோக்கி அன்பாக வீசினார் தவெக தலைவர் விஜய் . பின்னர் தொடர்ந்து அவர்கள் வீச தொடங்கியதும் நடை மேடை முழுவதும் துண்டுகள் குவிந்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
Thalapathy Vijay
TVKMaanadu vijay song
Tamilaga Vettri Kazhagam Ideology Song
TVK Uruthimozhi
TVK Maanadu Vijay
TVK Vijay wear Party Towel