அமலுக்கு வந்தது புதிய சட்டத்திருத்தம்! பாலியல் குற்றத்திற்கான கடும் தண்டனை விவரங்கள் இதோ..,

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டால் கடும் தண்டனைகள் வழங்கப்படும் சட்டத்திருத்தம் தமிழகத்தில் அமலானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TN GOVT NEW LAW

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கடந்த ஜனவரி 11-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றம் செய்தார். பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே உள்ள தண்டனை சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்து இன்னும் கடுமையான தண்டனை வழங்கும் விதமாக சட்டதிருத்தம் கொண்டுவந்துள்ளார்.

இந்த சட்டத்திருத்த மசோதாவானது எந்தவித எதிர்ப்பும் இன்று ஒரு மனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து ஆளுநர் ஒப்புதலுக்காக இச்சட்டத்திருத்தம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி இச்சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து, அதனை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், தற்போது இச்சட்ட திருத்தம் கடந்த ஜனவரி 25 முதல் தமிழகத்தில் அமலாகியுள்ளது என தமிழ்நாடு அரசிதழில் வெளியானதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.

சட்டத்திருத்தும் கூறுவதென்ன?

  • ஒருவர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருந்தால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
  • பெண்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபாட்டால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
  • பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும்.
  • பெண்ணை பின் தொடர்ந்தால் அக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கப்பெறும். இச்சட்டம் குற்றவாளி பிணையில் வெளியில் வரமுடியாதபடி திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் குற்றவாளிக்கு  3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.
  • குறிப்பிடட்ட சில பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது.
  • பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கில் தாக்கும் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.
  • நெருங்கிய உறவினரால் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அந்த குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையில் உள்ள தண்டனையின் அளவை 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு குற்றவாளிகளுக்கு தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்த குற்றத்திற்கான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இச்சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளாதால் இனி பாலியல் குற்றத்தின் அளவு குறையும் என்றும், அதனையும் மீறி  பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டால் தமிழ்நாட்டில் கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்