சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து வந்தது. அந்த வகையில், தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை நியமிக்கப்படவுள்ளார். மேலும், மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜியும் பதவியேற்கவுள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை […]
டெல்லி: தமிழகத்தில் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம், அதே போல சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக மாநில ஆளுனரிடத்தில் பாஜக , அதிமுக கட்சியினர் கோரிக்கை வைத்து இருந்தனர். மேலும் தமிழக சட்ட ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநர் ரவியிடம் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி […]
Ponmudi: சென்னை கிண்டியில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்…. ஆனால், ஆளுநர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் […]
Ponmudi : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், தனது அமைச்சர் பதவியை மட்டுமல்லாது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி. Read More – கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி. உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து […]
Ponmudi Case : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குறிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இருவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்து இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. இந்த உரையில் அரசு கொடுத்த உரையினை ஆளுநர் ரவி முழுதாக புறக்கணித்து இருந்தார். இதனை தொடர்ந்து 2 நாள் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்தது. இன்று ஆளுநர் உரைக்கு பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்ற உள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து இந்த நேரலையில் காணலாம்…..
கடந்த திங்கள் கிழமை பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் கூடியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் ஆளுநர் உரை, அடுத்த இரண்டு நாள் விவாதம் , அதற்கடுத்து இன்று முதல்வர் பதிலுரை என பட்டியலிடப்பட்டுள்ளது. அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி..! முன்னதாக திங்களன்று ஆளுநர் உரையின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையை வாசிக்க்காமல், அதனை வாசிக்க தனக்கு […]
இந்த வருடன் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையின் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தினரின் அறிமுகத்தை வாசித்தார். அதன் பின் பாதியில் அதனை நிறைவு செய்து, இங்கு (சட்டப்பேரவையில்) தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி இரண்டு நிமிடத்தில் உரை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ரவி . இது குறித்து சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் கூறுகையில், தேசிய கீதத்தை […]
மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் […]
இன்று சுதந்திர போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127வது பிறந்தநாள் ஆகும். நேதாஜி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர் […]
தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி […]
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் முக்கிய தீர்மானங்களுக்கு (மசோதா) ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது எந்த வகையில் சரியானது அல்ல. – அமைச்சர் பெரிய கருப்பன். தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் பதவி காலத்தை 3 ஆண்டாக குறைப்பது தொடர்பான மசோத நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இதனை ஆளுநர் கையெழுத்திடாத காரணத்தால் அந்த மசோதா தற்போது காலாவதி ஆகியுள்ளது. இது குறித்து, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில், கூட்டுறவு சங்க பதவி […]
ஆதாயம் தரும் இரட்டை பதவியில் ஆளுநர் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , அண்மையில் ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநராக இருப்பவர்கள் ஆதாயம் தரும் பதவியில் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். […]
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை சென்னையில் ஆளுநர் மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்கனவே, […]
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயிலை ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தமிழகத்துக்கும் காசிக்குமான கலாச்சார தொடர்பு , பண்டைய வரலாறு, கல்வி, பொருளாதரம் ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் இன்று (நவம்பர் 17) முதல் டிசம்பர் 16வரையில் வாரணாசியில், காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க சென்னையில் இருந்து தமிழக பிரதிநிதிகள் அடங்கிய ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து […]
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29இல் காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட போவதாக தற்போது அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிடுகையில், தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு […]
திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற கோரிய கடிதம் குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழகத்தின் 15வது ஆளுநராக மேகாலயா, நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார். மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட காலதாமதம் ஆக்குகிறார் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி […]
அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் – வைகோ கடும் விமர்சனம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு மேடைகளில் பேசும் கருத்துக்கள், அவரது செயல்பாடுகள் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பல்வேறு காரணங்களால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்த, கையெழுத்திட […]
பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜகவை மகிழ்விக்க எண்ணி , அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் ஆளுநரின் செயல்பாடு குறித்து விமசித்து கூட்டாக […]
உயர் பதவியில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டுவருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு […]