வ.உ.சியின் 150 -வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பெரிய காட்டன் சாலைக்கு பெயர் மாற்றம்...!

Thoothukudi Big Cotton Road has been renamed as VOC Road to mark the 150th birth anniversary of VOC.

வ.உ.சியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-ஆவது பிறந்தநாள் விழா செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.

மேலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும் எனவும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படக்கூடிய அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.