சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்க 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன், பாராட்டத்தக்க வகையில், சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து, சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த, தலைசிறந்த நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிந்தது. அந்த வகையில், சமூகப் பொறுப்புடன் செயல்படும் […]
வ.உ.சியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-ஆவது பிறந்தநாள் விழா செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும், […]
தமிழக முன்னால் முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’-ஆக அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், அந்த அறிவிப்பிற்கிணங்க, நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை […]
விஞ்ஞானி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். இவர் தற்போது தான் அதிக பொருட்செலவிலான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு டிரினிட்டி வேவ்ஸ் என்கிற மியூசிக் ஸ்டுடியோவை உருவாக்கி உள்ளார். இந்நிலையில் வில்லவன் என்கின்ற மலேசிய தமிழ் படமானது இவரது இசையில் உருவானது. இந்த படமானது அதிக பொருட்செலவில் உருவானது.அதே நேரத்தில் இந்த படமானது மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு சூப்பரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவருடைய இசை ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது […]