'திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை.., ஏழை மக்களுக்காக அதிமுக குரல் கொடுக்கும்'- எடப்பாடி பழனிசாமி.!

2026 அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஏழைகள் வாழும் பகுதிகளில் மீண்டும் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என்று திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Edappadi palaniswami

திருச்செந்தூர் :மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்தத்தோடு தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, இன்று திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது, திருச்செந்தூர் வ.உ.சி திடலில் உரையாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, ”இன்று தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. தமிழ்நாடு அரசு செயலிழந்துள்ளது. மக்களை ஏமாற்றும் திமு மக்களிடம் வாங்கிய மனுக்களை எல்லாம் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி தந்திரமாக செயல்படுகிறது திமுக அரசு.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் விவசாய தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. 2026 அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஏழைகள் வாழும் பகுதிகளில் மீண்டும் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.

மழைக்காலத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி அதிமுக அரசால் வழங்கப்படும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வருகின்ற 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையும்” என தெரிவித்துள்ளார்.