சென்னை :தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர். தவெக மாநாட்டில் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் எனக் கூறியதால், திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது யாராக இருந்தாலும் தனக்கு எதிரி என விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இவ்வாறு, விஜய்யை சீமான் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்தார். எனினும் சீமானை இகழ்ந்து பேசக்கூடாது என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இரு கட்சியினருக்கும் சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் வெடித்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆம், விஜய் தனது எக்ஸ் பதிவில், “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது, தன்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ஓபிஎஸ் உள்ளிட்ட 13 பேருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, 14ஆவதாக தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், “என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
unknown node