செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவகம் ஜப்தி.! 6 வருடமாக சொத்துவரி செலுத்தப்படவில்லையாம்....

6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது.

6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது.

தென்காசியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் சொத்துவரி செலுத்தவில்லை என நீதிமன்றம் வரை சென்றும் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறி தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி ரூபாய் 6.80 லட்சம் இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் உத்தரவு போட்டும் செலுத்தப்படாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தை பூட்டியுள்ளனர்.