BSNL : பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களுடைய நெட்டை ஏவ்வாறு வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பலரும் பிஎஸ்என்எல் (BSNL) சிம்மை உபயோகம் செய்துகொண்டு வருகிறார்கள். இந்த சிம்மில் மற்ற சிம்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறது.குறிப்பாக 28 வேலிடிட்டி பிளான் மற்ற சிம்களில் 239 ரூபாய் இருக்கும் ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) சிம்மில் அந்த பிளான் 139 ரூபாய்க்கே கிடைத்துவிடும். இப்படி மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் இருப்பதன் […]
6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது. தென்காசியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் சொத்துவரி செலுத்தவில்லை என நீதிமன்றம் வரை சென்றும் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறி தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி ரூபாய் 6.80 லட்சம் இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் உத்தரவு போட்டும் செலுத்தப்படாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தை பூட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 15, 2023இல் இருந்து பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்படும். – என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்தார். கடந்த ஆக்ஸ்ட் மாதம் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி 5ஜி அலைக்கற்றை சேவையை இந்தியாவில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டும் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சில் பிரதமர் பேசியதை அடுத்து, மத்திய […]
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்த 1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்ற நெட்ஒர்க் உடன் போட்டி போடும் அளவுக்கு இல்லாமல் பலன் இழந்து காணப்படுகிறது. 4ஜி சேவை வலுப்பெற வேண்டும் என பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அரசு தொலைதொடர்பு நிறுவனம் வலுப்பெற போதிய நிதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்த […]