6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது. தென்காசியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் சொத்துவரி செலுத்தவில்லை என நீதிமன்றம் வரை சென்றும் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறி தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி ரூபாய் 6.80 லட்சம் இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் உத்தரவு போட்டும் செலுத்தப்படாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தை பூட்டியுள்ளனர்.
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) நிர்வாகம் 700 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு சொத்து வரியை தள்ளுபடி செய்யும் திட்டத்தை நிராகரித்துள்ளது. இந்த பிரச்சினையில் எந்த முடிவும் எடுக்க இயலாமையை வெளிப்படுத்திய குடிமை அமைப்பு, அத்தகைய குறிப்பிட்ட அளவுள்ள வீடுகளுக்கு தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசிடமிருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. 2018 இல் பாஜக எம்பியும் கார்ப்பரேட்டருமான மனோஜ் கோடக் மூலம் இந்த முன்மொழிவு முன்மொழியப்பட்டது, பின்னர் அது குடிமைப் பொதுக்குழு […]
சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு. 2021-22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அக்டோபர் 15க்கு பிறகு செலுத்துபவர்கள் தொகையுடன் 2% தனி வட்டி சேர்த்து செலுத்த என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி 94,900 பேர் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளது.
திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ரஜினியின் சட்ட […]
சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால், மாக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா வீரியம் குறையாத நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென […]