தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய அந்த கிராமத்தை சேர்த்த தம்பதியினருக்கு பாராட்டு தெரிவித்து ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்காசி மாவட்டம் புளியரை கிராம பகுதியில் ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், நேற்று முந்தினம் நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை […]
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையில் ஒரு சில இடங்களில் மீதமானது முதல் லேசான சாரல் மழை வரை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வணிக சிலிண்டர் விலை 12.50 ரூபாய் உயர்வு.! பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பள தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மதம் முதல் தான் உப்பு விளைச்சல் நன்றாக ஆரம்பமாகும் காலம் […]
செங்கோட்டை பெண் நகர்மன்ற தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அந்நகராட்சி ஆணையர் சுகந்தி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக என 19 பேர் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பான மனு செங்கோட்டை நகராட்சி ஆணையரிடமும் வழங்கப்பட்டது. […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், அனைத்து உதவிகளையும் மத்திய அரசு […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் […]
தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்ட மக்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் (டிசம்பர் 17 மற்றும் 18) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் முதலமைச்சரின் பயணத்தில் மீண்டும் மாற்றம் இன்றிரவு மதுரை சென்று அங்கிருந்து நெல்லை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தென் மாவட்ட […]
கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கி மற்றும் பொது சேவை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, […]
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, […]
தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது. விடாது பெய்த கனமழை..! நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.! அதே போல இன்று அதிகாலையிலேயே நெல்லை, தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. கனமழையை தொடர்ந்து முன்னதாக திருநெல்வேலி […]
6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது. தென்காசியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் சொத்துவரி செலுத்தவில்லை என நீதிமன்றம் வரை சென்றும் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறி தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி ரூபாய் 6.80 லட்சம் இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் உத்தரவு போட்டும் செலுத்தப்படாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தை பூட்டியுள்ளனர்.
ஒரு சிறு மாத்திரையில் வள்ளுவர் உருவத்தை வரைந்த ஏழை மாணவியின் அசாத்திய ஓவிய திறமையானது குடும்பச்சூழல் காரணமாக நின்றது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகளும் விருப்பங்களும் இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காக கிடைத்த வேலைக்கு செல்லும் காலம் இது. இத்தகைய நிலையில் சிறு பொருள்களில் கூட ஓவியம் வரையும் திறமை கொண்ட இந்த பெண் தனக்கு விருப்பமான ஓவியக்கலை படிப்பில் குடும்ப சூழ்நிலையால் சேர முடியாமல் இருக்கிறாள். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆழங்குலம் அடுத்துள்ள ஊத்துமலை கிராமத்தை […]
தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]
தென்காசி மாவட்டம் செல்லப்பிள்ளையர்குள கிராமத்தில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் இருந்த கோடி தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கிராமத்தில் பாஜக கொடிக்கம்பத்தில் இருந்து கொடியை மர்மநபர்கள் எரித்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லப்பிள்ளையார்குளம் எனும் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. அதே போல, பாஜக கொடிக்கம்பமும் இருக்கிறது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்து யாரோ சில […]
தென்காசியில் 2019ஆம் ஆண்டு திருடப்பட்ட நகைகளை அணிந்து, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து பணிப்பெண் ஒருவர் போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார். தென்காசியில் சிவந்தி நகர் பகுதியில் பங்கஜவள்ளி எனும் ஓய்வுபெற்ற ஆசிரியை தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2019ஆண்டு ஓர் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்த திருட்டு சம்பவத்தில் 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. அப்போதே போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் தடையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கண்டறிய முடியவில்லை. வருடங்கள் கடந்த பிறகு […]
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை கடைபிடித்த வழக்கில், குற்றவாளிகளுக்கு 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை என நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க செல்கின்றனர். அப்போது அந்த கடைக்காரர், உங்களுக்கு மிட்டாய் கொடுக்க கொடுக்க கூடாது […]
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரோ, மற்றவர்களோ பள்ளியில் எந்த பாகுபாடும் இருப்பதாக புகார் தெரிவிக்கவில்லை. -பஞ்சாக்குளத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பெரியார் பிறந்தநாளன்று வெளியான தென்காசி, பஞ்சகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளிடம் கடை உரிமையாளர் தின்பண்டம் தர மறுத்து சாதிய தீண்டாமை காட்டிய வீடியோ தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, மகேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு […]