இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலர் தீவிர ஆலோசனை.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள், வணிகவளாகங்கள் , வழிபாட்டு தளங்கள் என

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள், வணிகவளாகங்கள் , வழிபாட்டு தளங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் அடுத்த மாதம் வரவுள்ள ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அப்போது மசூதிகளில் சிறப்பு தொழுகைகளும் நடைபெறும்.இது குறித்து, தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய தலைவர்களுடன் இன்று தலைமை செயலர் சண்முகம், சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஆலோசித்து வருகிறார். நோன்பு காலத்தில் எப்படி, பாதுகாப்பாக நோன்பு கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசானை மேற்கொள்ள  உள்ளனர்.