சென்னை :NIRF தரவரிசை 2025, இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை 17 வகைகளில் மதிப்பீடு செய்து, பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது. இதில், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்த பிரிவில் 7 ஆவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் முதலிடம் பெற்றிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”2025 NIRF தரவரிசைப் பட்டியலில், உயர்கல்வி சிறந்த தமிழ்நாடு என மீண்டுமொரு முறை நிரூபணமானது.
இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய – அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய – அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
#NIRF2025: Tamil Nadu continues to set the benchmark
🏅 With 17 institutions among the Top 100 in the Overall category, 33 among the Top 100 in the College category, and 10 among the Top 50 in the State Public University category, our state holds the largest share across these… https://t.co/aiMyP50LXh
— M.K.Stalin (@mkstalin) September 4, 2025
