டெல்லி : பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. நாடு முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், கல்லூரிகள் என பலவேறு கல்வி அமைப்புகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 2023-2024 கல்வியாண்டில் கல்லூரிகளின் செயல்பாடுகளை கொண்டு தற்போது மத்திய அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிடுள்ளது. இந்த தரவரிசையில் […]
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொழிற்கல்வி பல்கலைக்கழகமான இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (IIT) முதுகலை பட்டங்கள், பிஎச்.டி பட்ட படிப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்படும் JAM 2024(Joint Admission Test) மோளம் சேர்க்கையை ஐஐடி சென்னை (IIT Madras) பல்கலைகழகம் நடத்தும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி […]
இந்தியாவின் புத்தாக்க கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக்காக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் 1,438 உயர் கல்வி நிறுவனங்கள் ARIIA தரவரிசை பட்டியலுக்கு விண்ணப்பித்திருந்தன என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 2வது இடம் பிடித்துள்ளது. […]
நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவிப்பு. தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லுரிகள் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் […]
கொரோனா,கேன்சர் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நவீன தொழில்நுட்ப முறையை ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். மருத்துவ ஆய்வுக்காகவும் கொரோனா,கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது என்று,ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவாக,’ஆர்கனாய்டுகள்’ எனப்படும் மனித மூளை திசுக்களை செயற்கையாக வளர்க்கும் “3D பிரிண்டட் […]
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அந்த தரவரிசை பட்டியலில் சிறந்த முறையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் சென்னை ஐஐடி சிறந்து விளங்கியதால், முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து, ஐஐஎஸ்சி பெங்களூரு மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.
சுபம் பானர்ஜி என்பவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து உள்ளார். கழிவறையில் செல்போன் கேமரா இருப்பதை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களை வீடியோ எடுத்ததை சுபம் பானர்ஜி ஒப்புக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின் உதவி பேராசிரியராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு […]
ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களைக் […]
கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் இன்டெர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அவரது செல்போனை ஆராய்ந்தபோது, அதில், பாத்திமா, தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசிரியர்கள் காரணம் என அவர் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருப்பதாக […]
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை.அதற்காக எந்தவொரு பிரச்சனையும் இல்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மத்திய அரசு கட்டுப்பாட்டில்,அதன் நிதியின் மூலம் உருவாகியுள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் ஐ.ஐ.டி.க்கள் ஆகும். மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் […]
சென்னை ஐஐடியில் நடைபெற்ற மத்திய அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் வாழ்த்து பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடலான ‘ மகா கணபதி ‘ வாழ்த்து பாடல் ஒலிப்பரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.