டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் நன்றி.!

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy has thanked Chief Minister Arvind Kejriwal for setting up a Tamil Academy in Delhi.

டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் “டெல்லியில் தமிழ் அகாடமி” அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

unknown node