வெற்றிக்காக முக ஸ்டாலின் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் என பரப்புரையில் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சேலம் ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்று கூறி, திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவர் போடாத வேடமே இல்லை, அத்தனை வேடம் போட்டு, எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார் என விமர்சித்துள்ளர். இந்த அரசின் மீது […]
முதல்வர் பழனிசாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலவசங்கள் தள்ளுபடி என பல்வேறு திட்டங்களால் கடன் சுமை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் போது கடன் சுமை 4 லட்சத்து, 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது என்றும் இது, 5 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாயாக வரும் ஆண்டில் அதிகரிக்கும் எனவும் […]
தன் தாயை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள் என திமுக எம்பி ஆ.ராசா மீது முதல்வர் குற்றசாட்டியுள்ளார். தமிழகத்தில் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் குப்பனுக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், வெற்றி நடைபோடும் தமிழகம் என்றால், ஸ்டாலினுக்கு பயம், ஏனென்றால் அவர் எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார். ஏரளனமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளதால் தான் வெற்றிநடைபோடும் தமிழகம் என்கிறோம். ஸ்டாலினின் மூலதனமே […]
முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் […]
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து ராஜவர்மனை நீக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வர். சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதன்பின் பேசிய அவர், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறிய, சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என கூறியுள்ளார். இந்த பரபரப்பான […]
வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.இன்று பிற்பகல் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நெருக்கடிகள் சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசுகையில், விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்கள் அறிவிப்பது இல்லை.கடன் வாங்குவது வளர்சிக்காக தான்.எல்லா மாநிலங்களும் கடன் […]
முதலமைச்சர் பழனிசாமி 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி இன்று மதியம் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.செய்தியாளர் சந்திப்பு 3.30 மணிக்கு நடைபெரும் […]
தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் […]
புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. […]
சென்னை தலைமைச் செயலகத்தில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். கலைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தத கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டது . பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, சிவகார்த்திகேயன், சௌகார் ஜானகி, ராமராஜன், தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமீதா,இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. […]
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது. கட்டண விவரம் : 0-2 கி.மீ வரை கட்டணம் ரூ.10 2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20 5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30 12-21 கி.மீ வரை கட்டணம் ரூ.40 21 கி.மீ முதல் 32 கி.மீ […]
ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், ஏழைகளுக்கு உதவி, தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அதிமுக மட்டும்தான். சிலர் மற்றவர்களிடம் பிடுங்கி தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். விட்டுக்கொடுப்பவர்கள் […]
மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தற்போது வெவ்வேறு அரசு துறைகள் தங்களுக்கு என்று தனித்தனியாக துறைவாரியாக குறைதீர் மையங்கள் மற்றும் இணையதளங்களை செயல்படுத்தி வருகின்றனர்.மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் ,மாதாந்திர மனு நீதி நாள் ,விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் உள்ளிட்டவையும்,மாநில அளவில் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை […]
மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெரும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் தமிழக கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற 1100 என்ற எண்ணை அழைக்கும் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த எண்ணிற்கு அழைத்தால் அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும் எனவும் குறிப்பிட்டார். தமிழக அரசின் அனைத்து […]
ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதன்காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா இருக்கும்போது உழைக்கும் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் […]
அதிமுக பின்னடைவை சந்திக்க தினகரன் முயற்சி செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதன் பின் நீண்ட […]
அதிமுக வாக்குறுதி கொடுத்தால் நிறைவேறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் , கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி கடனை செய்த ஒரே அரசு அதிமுக அரசு.ஸ்டாலினுக்கு இது பொறுக்கவில்லை. ஆட்சியில் இல்லை ,அதிமுக தான் ஆட்சியில் உள்ளது.நான் தான் முதலமைச்சராக உள்ளேன்.இவர் எப்படி விவசாயி கடன்களை தள்ளுபடி செய்ய முடியும்.எவ்வளவு […]
15 நாட்களுக்குள் பயிர் கடன் தள்ளுபடி செய்யப் பட்டதற்கான ரசீதுகள் விவசாயிகளிடம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்தவாறு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்து […]
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சுமார் பத்து நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.இந்த துயரச் செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த […]