தேசிய தலைநகரான டெல்லியில் புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை, கடந்த பிப்ரவரி 26ம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு சிபிஐ கைது செய்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர், மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு. டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க கோரி வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு […]
டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் “டெல்லியில் தமிழ் அகாடமி” அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தமிழ் […]
எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளரான தரம்பல் குலாட்டி இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உலகின் மிக புகழ்பெற்ற மசாலா பிராண்டான எம்.டி.எச் மசாலாவின் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி . கடந்த 3 வாரமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தரம்பல் குலாட்டி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவர் அதிகாலை 5.30 மணிக்கு கடைசியாக மூச்சு விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1923-ல் பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து […]
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தலைமையில் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி.யின் 57 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநிலக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கலந்துகொண்டார். அப்போது, கொரோனா தொற்றுநோய் காரணமாக, மாணவர்கள் பள்ளி நாட்களை தொடர்ந்து இழப்பதால் அனைத்து வகுப்பினருக்கான பாடத்திட்டங்கள் 50 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு, நுழைவுத் தேர்வுகள் ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ’ போன்றவை குறைக்கப்பட்ட […]
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவர், கொரோனா தொற்றுடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்துள்ள காரணத்தால் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையின் ஐ.சி.யு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று இவரது உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.