Arvind Kejriwal: நான் ரூ.100 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த பணம் எங்கே என கெஜ்ரிவால் கேள்வி மதுபான கொள்கை, ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு தாக்கல் […]
Arvind Kejriwal : டெல்லி சிறையில் இருந்து கொண்டே மாநில முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கதுறை விசாரணையில் இருந்தாலும் முதல்வராக தனது பதவியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். […]
Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது மற்றும் காவலை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Read More: கவிதாவுக்கு மேலும் 3 […]
Congress: அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் கைதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ED கைது செய்ததை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இன்றிரவே உச்ச […]
Arvind Kejriwal Arrest: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். Read More – கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணையால் பரபரப்பு அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
மேயர் தேர்தலுக்கே இவ்வளவு முறைகேடுகளில் பாஜக ஈடுபடுகிறது என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி இவர்கள் நடத்துவார்களோ என்ற அச்சம் தனக்கு ஏற்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன்போது மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் மேயராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மோசடியில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி அனில் மசிக்கை குற்றவாளி […]
பாஜகவில் இணையுமாறு தான் வற்புறுத்தப்பட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதாக கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது. இதையடுத்து அவர் கைதாவாரா என்ற பரபரப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “எனக்கு எதிராக எந்த ஒரு சதி […]
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத் துறை ஐந்தாவது முறையாக அனுப்பிய சம்மனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லி அரசு கடந்த 2021 – 22 நிதியாண்டில் கொண்டு வந்த மதுபான கொள்கையால் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலனடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என, […]
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் 4வது முறையாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் புதியதாக அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெற்றுக்கொண்ட மதுபான கொள்கை மூலம் கோடி கணக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் முன்னதாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். 4 வயது சிறுவன் மரணம் : […]
டெல்லி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதாவது, டெல்லியை ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும், பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் 82.15 கிமீ நீள பாதைக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் டெல்லி – மீரட் தொலைவை 60 நிமிடங்களில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் […]
அமலாக்கத்துறை சம்மன் சட்டவிரோதமானது, உடனடியாக அதனை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு இவ்வாறு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. அந்தவகையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி […]
கடந்த 2021 டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. அதன் பிறகு இந்த மதுபான கொள்கை விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணைக்காக […]
குஜராத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி குறித்த கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில். நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. அதாவது, குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 63% வாக்குகள் மட்டுமே பதிவானது என்றும் ரண்டாம் கட்ட தேர்தலில் 67% […]
டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி. டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றசாட்டியிருந்தார். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூடியது. […]
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் 77 இடங்களை வென்று காங்கிரஸ் தனது எண்ணிக்கையை மேம்படுத்தியது. இந்த நிலையில், இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் வருவதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் […]
கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நவீன வசதிகளுடன் உள்ள அரசு பள்ளியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். டெல்லி அரசு பள்ளியை பார்வையிட்ட முதலமைச்சர், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி மொஹல்லா […]
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை பார்வையிடும் தமிழக முதல்வர். தலைநகர் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று நாடாளுமன்றம் சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய […]
நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி, இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம், மழை வெள்ளம் […]
டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ளார். டெல்லி தலைமை செயலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கோடியை ஏற்றிப்பின் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது மக்களுக்கு சேவை செய்யும் போது உயிர் இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கிற்கு […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. டெல்லியில் இன்று காணொளி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா வைரசால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை இழந்து தவிப்பவர்களுக்கு டெல்லி அரசு நிதி உதவி வழங்கும் என்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை வளர்ப்பது மற்றும் அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி […]