பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம்..! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு
மேயர் தேர்தலுக்கே இவ்வளவு முறைகேடுகளில் பாஜக ஈடுபடுகிறது என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி இவர்கள் நடத்துவார்களோ என்ற அச்சம் தனக்கு ஏற்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன்போது மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் மேயராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மோசடியில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி அனில் மசிக்கை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு..! நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்திக்கு ஜாமீன்
ஒரு மேயர் தேர்தலுக்கே இவ்வளவு முறைகேடுகளில் பாஜக ஈடுபடுகிறது என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி இவர்கள் நடத்துவார்களோ என்ற அச்சம் தனக்கு ஏற்படுகிறது. அதே சமயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது” என கூறியுள்ளார்.