கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது மற்றும் காவலை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Read More: கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் காவல் நீட்டிப்பு!
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 28ம் தேதி வரை கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
Read More: காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட 6 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் பாஜகவில் ஐக்கியம்!
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை கைது மற்றும் காவலில் வைத்து விசாரிக்கும் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். கெஜ்ரிவாலின் கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு இரண்டும் சட்டவிரோதமானது என்று அவரது வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025