உத்தரவை கிடப்பில் போட்ட டெல்லி அரசு.? எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்.!

Supreme Court of India - Delhi CM Arvind Kejriwal

டெல்லி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதாவது, டெல்லியை ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும், பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.

டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் 82.15 கிமீ நீள பாதைக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் டெல்லி – மீரட் தொலைவை 60 நிமிடங்களில் கடக்க முடியும் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான் தேர்தல்: 500 ரூபாய்க்கு சிலிண்டர், 2 லட்சம் வட்டியில்லா கடன்! வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

டெல்லி-மீரட் RRTS வழித்தட திட்டத்திற்கு மத்திய அரசு 5,687 கோடி ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசு 5,828 கோடி ரூபாயும், டெல்லி மாநில அரசு 1,138 கோடி ரூபாயும் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2019இல் உத்தரவிட்டது.

ஆனால் தற்போது வரை டெல்லி அரசு மேற்கண்ட நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக விமர்சித்துள்ளது.  நிதி அளிக்க முடியாத நிலையில் டெல்லி அரசு இருக்கிறதா என விமர்சித்துள்ளனர்.

முன்னதாக, டெல்லி சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டண நிதியில் இருந்து ரூ.500 கோடியை ஆர்ஆர்டிஎஸ் திட்ட்டத்திற்கு வழங்குமாறு டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேலும் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி அரசு விளம்பரத்திற்காக செலவு செய்த தொகையை இரண்டு வாரங்களுக்குள் பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்