வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்.., பொதுமக்கள் அதிர்ச்சி!

திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த்னர்.

MKStalin - DMK

சிவகங்கை :‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்து வந்த ம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஜூலை 15ம் தேதி அன்று தொடங்கப்பட்டு, மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா, சான்றிதழ்கள் போன்றவற்றிற்கு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஆனால், சிவகங்கையில் கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, பூவந்தி, ஏனாதி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் என்பவர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் மனுக்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், இதை “அஸ்தியை கரைப்பது போல” மனுக்கள் குப்பையாக்கப்பட்டதாக விமர்சித்துள்ளார்.

தீர்வு காணப்பட்ட மனுக்கள் :

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இவை அனைத்தும் பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் எனவும், அவைகள் 13 மனுக்களின் நகல்கள் எனவும் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் தகவல். இதுகுறித்து திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் விசாரணை நடைபெறுவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.